ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Rajiv Gandhi Assassination Case

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டி!

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் போராடியதாக கூறினார். நல்லவர்கள் வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டம் அல்ல. சிறைவாழ்க்கையின்போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தினார்கள். தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். 30 ஆண்டு காலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு- ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்க சிறை நிர்வாகம் மறுப்பு! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவருக்கு 30 நாட்கள் விடுமுறை வழங்க கேட்டு அவரது தாய் ராஜேஸ்வரி சிறை நிர்வாகத்திற்கு ஒரு மனு அனுப்பியிருந்தார். அதில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால் துணைக்காக ரவிச்சந்திரனை ஒரு மாதம் விடுப்பில் அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பரிசீலித்த சிறை நிர்வாகம் விடுமுறை அளிக்க மறுத்து விட்டது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் ரவிச்சந்திரனுக்கு வழி பாதுகாப்பு தர இயலாது என்றும் அவர் தங்குவதாக குறிப்பிட்டுள்ள முகவரி அருகே இலங்கை அகதிகள் முகாம் இருப்பதால் ரவிச்சந்திரன் அங்கு தங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது....