சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!
சென்னை: 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது- மருத்துவர்கள் தகவல்!
சென்னையில் கொரோனா பரவல் கடந்த அலையைவிட தற்போது வேகமாக இருந்தாலும் பாதிப்பு குறைவாகவே உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே இருப்பதால் பலருக்கு ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.
ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவைகளில் மொத்தம் 1090 ஐ.சி.யூ படுக்கைகளில் 58 படுக்கைகள் அதாவது 6 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளன.
3,747 ஆக்சிஜன் படுக்கைகளில், 18 சதவீதம் (699 படுக்கைகள்) மட்டுமே நிரம்பி உள்ளன. பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் ஆதரவு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை.
அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் தேரனிராஜன் கூறுகையில், 231 நோயாளிகள் எஸ் ஜீன் வீ...
