ஈழ தமிழ் இசைக்கலைஞரின் சுயாதீன பாடல் வெளியீடு!
கபாலி, 36 வயதினிலே, இறுதிச்சுற்று படங்களில் பங்கேற்ற சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன்!
ஷியாமளாங்கன் இசையில் 'ராசாத்தியே..' எனும் சுயாதீன பாடலின் காணொலி வெளியீடு!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் ஈழ இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இசையில் தயாரான ‘ராசாத்தியே.. எனத் தொடங்கும் சுயாதீனப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழ்த் திரையிசையுலகில் புதுமைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் இசை ஆர்வலர்களும், ரசிகர்களும் வரவேற்பளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஷியாமளாங்கன், 2012 ஆம் ஆண்டில் 'அழகிய தென்றலே..' எனத் தொடங்கும் சுயாதீன வீடியோ இசைப் பாடலுக்கு இசையமைத்து வெளியிட்டார்.
இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்திலேயே இணைய வசதியில்லாத அந்த காலகட்டத்தில், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுச் சாதனை படைத்தது.
அதேபோல் 'எனக்கே எனக்...
