தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்!
தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம்!
பொது வினியோக திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை, பருப்பு, பாமாயில் போன்றவை குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 2 கோடியே 5 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைந்து வருகிறார்கள்.
குடும்ப அட்டைகளுக்கு வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி அரசின் சிறப்பு திட்டங்களின் கீழ் உதவித் தொகையும், பொங்கல் தொகுப்பும், வேட்டி- சேலை போன்றவையும் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் புதிய ரேஷன் கார்டுகள...
