அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க – கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க - கொரோனாவிலிருந்து மீண்ட ‘அயலான்’ பட இயக்குனர் வேண்டுகோள்!
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறித்து இயக்குனர் ரவிக்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டுள்ளதாவது: “முன்னெச்சரிக்கையோடு இருந்தேன் இருந்தும் கொரோனா என்னை தொற்றியது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு மருந்துகளை எடுத்துக்கொண்டேன். என்னோடு அருகிலேயே இருந்த என் குழந்தை நறுமுகைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. எனது மனைவி பிரியாவின் அன்பும், சலிப்பற்ற உணவு உபசரிப்பும் மீண்டுவர ரொம்பவும் உதவியது.
அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே...
