திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Remdesivir

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்! சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகிற 18-5-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும், தமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசிவிர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையதளத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த மருந்து ஒதுக்கீடு...
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சில மாநிலங்களில் படுக்கை தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து செலுத்த அதிக அளவில் மருந்து தேவைப்படுகிறது. கொரோனா தொற்றை குணப்படுத்துவதில் ரெம்டெசிவிர் ஊசி மருந்து சிறப்பான வகையில் பயனளிக்கிறது. இதனால் உலகளவில் இந்த மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்டிற்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது இந்தியாவில் அதிகமான தேவை இருப்பதால், கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும்வரை ரெம்டெசிவிர் ஊசி ம...