பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!
பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து!
பள்ளி-கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர். இதன் விவரம் வருமாறு,
பள்ளி மாணவி சரண்ஸ்ரீ:-
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பர்கள், ஆசிரியர்களை மீண்டும் சந்திப்பதில் மனம் சந்தோஷம் அடைகிறது. நேரடி வகுப்புகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நிலை இனி உயரும். நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பியிருப்பது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.
பள்ளி மாணவர்களான சகோதரர்கள் ஏ.ஹரி, ஏ.சிவா:-
தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடத்தை மீண்டும் அடைந்திருப்பது புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஆன்-லைன் வகுப்புக்கு விடை கொடுத்து, முன்புபோலவே நேரடி வகுப்பில் அமருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நேரடி வகுப்புகள் மட்டுமே பாட...
