சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!
சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 5 போலீஸ் சஸ்பெண்ட்!
சாத்தான்குளம் அப்பா மகன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய வசதியாக நெல்லை விருந்தினர் மாளிகையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அறை எண் 5-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 2 போலீசாருடன் சேர்த்து 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதற்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ந...

