காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை!
காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை!
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பைய...
