பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!
பாஜக செய்யும் ஊழலுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: சித்தராமையா குற்றச்சாட்டு!
பெங்களூருவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,
ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த காந்தராஜ், காங்கிரசின் கொள்கைளை ஏற்று கட்சியில் இணைந்துள்ளார்.
நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே கொள்கைகள் இருக்கிறது.
ஜனதாதளம் (எஸ்) சந்தர்ப்பவாத கட்சியாகும். அந்த கட்சிக்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. பா.ஜனதாவினர் ஆர்.எஸ்.எஸ். சொல்வதை கேட்டு நடக்க கூடியவர்கள்.
அந்த கட்சிக்கு என்று தனிக்கொள்கை எதுவும் இல்லை.
பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இந்தியாவின் கடன் ரூ.53 லட்சம் கோடியாக இருந்தது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.135 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பா.ஜனதா ஆட்சியில் நடந்த பெரிய சாதனை...
