இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை: சித்தராமையா!
கர்நாடக சட்டசபையில் நேற்று தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான சிறப்பு விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை.
இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும்.
தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னார்.
ஆனால் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் இடையே கூட்டணி தொடங்கியுள்ளது. இதன்மூலம் அந்த பெரு நிறுவனங்கள் அரசை கட்டுப்படுத்துகின்றன.
மது நாட்டில் உள்ள 142 பெரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.54 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த 2013-ம் ஆண்டில் ரூ.23 லட்சம் கோடியாக இருந்தது. நாட்டில் 19 ...
