நடிகை சோனாலி போகட் மரணம்- கிளப் உரிமையாளர் உள்பட இருவர் கைது!
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரபலமும், நடிகையுமான சோனாலி போகட் (வயது 42), தனது அலுவலக உதவியாளர்களுடன் கோவா சென்றிருந்த நிலையில் கடந்த 22-ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
சோனாலி போகட் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கோவா போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து சோனாலியின் உதவியாளர்களான சுதிர் சக்வான், சுக் விந்தர் வாசி ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் வடக்கு கோவா அஞ்சனாவில் உள்ள ரெஸ்டாரண்டில் நடந்த விருந்தில் போதை ஏற்படுத்தும் ஒரு வேதிப் பொருளை தண்ணீரில் கலந்து சோனாலிக்கு கொடுத்ததாக உதவியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதற்கிடையே சோனாலியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் ரத்த காயங்கள் அல்லாத தாக்குதல் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதிர் சக்வான், சுக்விந்தர் சிங்கை கோவா போலீசார் கைது செய்தன...
