சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும், கத்தரி வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் அரபிக் கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
அதன்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் (புதன்கிழமை), வியாழக்கிழமை (நாளையும்) மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, வருகிற 14-ந் தேதி (நாளை மறுதினம்) தென் கி...
