சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: tamil movie medhagu

“சல்லியர்கள்”  படத்திற்காக மண்ணுக்கடியில் பதுங்கு குழி போர்க்கள மருத்துவ முகாம்!  

“சல்லியர்கள்”  படத்திற்காக மண்ணுக்கடியில் பதுங்கு குழி போர்க்கள மருத்துவ முகாம்!  

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    போர்க்களத்தை மையப்படுத்தி தமிழில் வெகுசில படங்களே வெளியாகியுள்ளன. அந்தவகையில் சமகாலத்தில் நம் கண் முன்னே தமிழ் நிலத்தில் நடந்த போர் ஒன்றை மையப்படுத்தி "சல்லியர்கள்" என்கிற படம் உருவாகியுள்ளது. நடிகர் கருணாஸ் இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தலைவர் பிரபாகரனின் ஆரம்பகட்ட வாழ்க்கையை மையப்படுத்தி உருவான "மேதகு" படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டு தான் சல்லியர்கள் படத்தையும் இயக்கியுள்ளார். போர்க்களத்தில் கூட தமிழர்கள் எவ்வாறு அறம் சார்ந்து செயல்பட்டுள்ளனர் என்பதை மையப்படுத்தி, குறிப்பாக போர் மருத்துவம் பற்றியும் போர்க்களத்தில் இறங்கி பணியாற்றிய மருத்துவர்கள் பற்றியும் போர்க்களத்தில் எத்தனை உயிர்களைக் காப்பாற்றினார்கள்? தமிழ் வீரர்கள் மட்டுமல்லாது எதிரி வீரர்களையும் காப்பாற்றினார்களா என்பது பற்றியும் இந்தப்படம் ரொம்பவே ஆழம...