ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: Tasmac

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடை விதிக்க கோரி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும் சட்ட விதிகளின்படியே உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் விளக்கமளித்தார். பின், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்....
பொங்கலன்று ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!

பொங்கலன்று ரூ.317 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழ்நாடு முழுவதும்  பொங்கல் பண்டியையொடி,நேற்று ஒரே நாளில் ரூ. 317.08 கோடி அளவிற்கு  டாஸ்மாக் மது பானங்கள்  விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று  மாட்டு பொங்கல் விழாவும், திருவள்ளுவர் தினமும்  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி, இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அடுத்த 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைக விடுமுறைள் இயங்காது என்பதால், மது பிரியர்கள் பெட்டிப்பெட்டியாக மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக   மதுரையில் ரூ68.76 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மண்டல வாரியாக சென்னையில் ரூ.59.28 கோடிக்கும், ...

‘டாஸ்மாக்’ கடைகள் 4 நாள் மூட உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
‘டாஸ்மாக்’ கடைகள் 4 நாள் மூட உத்தரவு! ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி ‘சீல்’ வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்தில் 4 நாட்கள் ‘டாஸ்மாக்’ மதுக்கடைகள் அடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க...
அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு! சென்னை கலெக்டர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ந் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியையொட்டியும், 19-ந் தேதி மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....