தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி!
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோ...
