”நானே வருவேன்” படத்தைப் பற்றி பிரபல தயாரிப்பாளர் புகழாரம்!
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன்.
இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடிகர் தனுஷுடன் இணைந்திருந்தார். அதன் பிறகு இந்த கூட்டணியின் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ”நானே வருவேன்” படத்தின் அறிவிப்பு மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தினர்.
யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்தது.
இதனிடையே, நடிகர் தனுஷ் தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்திலும், செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்திலும் நடித்துவந்ததால் நானே வருவேன் படப்பிடிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு படங்களின் பணிகளை முடித்துள்ளதால், தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும...
