சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

Tag: tiruchendur murugan temple

திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருச்செந்தூர் கோவிலில் இன்று தைப்பூச திருவிழா… பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
      தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 14-ந் தேதி பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசமான செவ்வாய்க்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் கோவில்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இன்று வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.   5 நாட்கள் தடை எதிரொலியாக அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த வியாழக்கிழமை வரை ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இந்த நிலையில் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா இன்று  நடக்கிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட...