திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?
திருப்பதி கோவிலுக்கு வரும் வெளிநாட்டு நன்கொடைகள் நிறுத்தம்! ஏன் தெரியுமா?
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை காணிக்கையாக செலுத்துகின்றனர்
வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையான் பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கான உரிமத்தை புதுப்பிக்காததால் வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடை நிறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கு நிதி வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் உரிமம் வழங்கி வருகிறது.
அவ்வாறு திருப்பதி தேவஸ்தானத்திற்கு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் உரி...

