ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: Tokyo Para Olympic

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்!

பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டி- ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் கிருஷ்ணா நாகர்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் மான் கையை 17-21, 21-16, 17-21 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  19 பதக்கங்களை வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  வெள்ளி பதக்கம் வென்றனர். 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளார். பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது....
பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்!

பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாராலிம்பிக்- இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். பிரிட்டன் வீரருடன் கடும் போட்டி நிலவிய நிலையில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி பிரவீன்குமார் வெள்ளி வென்றுள்ளார். வெள்ளி வென்ற 18 வயதே ஆன பிரவீன்குமார், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்தவர். பிரிட்டன் வீரர் ஜோனதன் உடன் கடும் போட்டி நிலவிய நிலையில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். பாராலிம்பிக் போட்டியில் 2.10 மீட்டர் உயரம் தாண்டி பிரிட்டன் வீரர் ஜோனதன் தங்கப்பதக்கம் வென்றார். நடப்பு பாராலிம்பிக் தொடரில் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக் – வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்!

டோக்கியோ பாராலிம்பிக் – வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் - வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியாவுக்கு வெள்ளி பதக்கம்! மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா. டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக் – ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்!

டோக்கியோ பாராலிம்பிக் – ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் - ஈட்டி எறிதலில் 2 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்! மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்திய வீரர் தேவேந்திரா ஜஜாரியா வெள்ளிப் பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இலங்கை வீரர் ஹெராத் தங்கப் பதக்கத்தை வென்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது....
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டோக்கியோ பாராலிம்பிக் போட்டி- இந்தியாவுக்கு முதல் தங்கம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது.  இதில் இந்தியா வீராங்கனை அவனி லெகாரா, மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது....