வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!
வீடுகளின் முன்பு கருப்பு கொடி... ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்... ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை வரை அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
தூத்துக்குடி, பண்டாரம்பட்டி புதுத்தெரு கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீ...
