‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு
‘தினமலர்’ கோபால்ஜி தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மாநில விசுவ இந்து பரிஷத் தலைவராக இருந்த ராமகோபாலன் மறைவைத்தொடர்ந்து, தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், நசென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசுவ இந்து பரிஷத் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக, அகில உலக முன்னாள் செயல்தலைவர் வேதாந்தம் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அதன்படி, தற்போதைய மாநிலத்தலைவர் ரத்தினசாமி போஷகராகவும், புதிய மாநில தலைவராக தினமலர் ஆர்.ஆர்.கோபால்ஜியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக சோமசுந்தரம், துணைத் தலைவர்களாக கிரிஜா சேஷாத்திரி, ஆர்.பி.கிருஷ்ணமாச்சாரி, எம்.ஜெ.துளசிராம், கவுசிக் என் சர்மாவும், செயல் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்...
