சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Vigas cube encounter

ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

ரவுடி விகாஸ் துபே காரை கவிழ்த்து என்கவுண்டர் செய்து தன் ரகசியத்தை உ.பி.அரசு காப்பாற்றிக் கொண்டது – அகிலேஷ் யாதவ் கருத்து

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உ.பி.அரசு ரகசியத்தை காப்பாற்றிக் கொள்ள ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் கொலை - அகிலேஷ் யாதவ் கருத்து உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.  இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் பேசப்பட்ட இந்த கொடூர கொலை சம்பவத்திற்கு காரணமான ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தர பிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலீஸ் பிடியில் விகாஸ் துபே சிக்கினான். இதையடுத்து, உத்தர...
பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
டி.எஸ்.பி. உட்பட 8 போலீசாரை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை.   உபி ஸ்டேட்டிலுள்ள கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட...