சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: Vizhithezhu

விழித்தெழு ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

விழித்தெழு ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் சிவகங்கை நகர் மன்றத் தலைவரும் 'பருந்துப் பார்வை' இதழ் ஆசிரியரும் நடிகருமான சி .எம் .துரை ஆனந்த் தயாரிப்பில் நடிகர் முருகா அசோக் ,காயத்ரி நடிப்பில் இயக்குநர் ஏ.தமிழ்ச்செல்வன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'விழித்தெழு 'படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் பேரரசு ,தயாரிப்பாளர்கள் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் சங்கம், தொழிலதிபர் தாம் கண்ணன், ,தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி. எஸ் .ஆர். சுபாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் ஆதவன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் சி .எம் .துரைஆனந்த் பேசும்போது, "சென்ற ஆண்டு இதே இடத்தில் ஒரு திரைப்பட விழாவில் நான் கலந்து கொண்ட போது நானும் திரையுலகில் நுழைந்து ஓராண்டுக்குள் ஒரு விழாவில் கலந்து கொள்வேன...