6 பிளஸ் 23 ஆண்டுகள்… அழகான ஒரு மில்லியன் தருணங்கள்… காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!
6 பிளஸ் 23 ஆண்டுகள்... அழகான மில்லியன் தருணங்கள்... காதல் திருமண நாளை பகிர்ந்த பிரியங்கா!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராபர்ட் வதேராவை 6 ஆண்டு காலம் காதலித்து, பின்னர் மணந்தார்.
இவர்களது திருமணம், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் எண்.10, ஜன்பத் இல்லத்தில் 1997-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ந் தேதி நடந்தது. பிரியங்கா, ராபர்ட் வதேரா தம்பதியர் நேற்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடினர்.
அதில் அவர், “ ஒரு மில்லியன் அழகான தருணங்கள்... காதல், கண்ணீர், சிரிப்பு, செல்ல கோபம், நட்பு, குடும்பம், இறைவனின் 2 அன்புப்பரிசுகள் .. ஒப்பிட முடியாத நாய்குட்டிகள்... இருவரும் இணைந்த வாழ்நாளில் ஈடுசெய்ய முடியாத உறுதியான ஞானம்... 6 பிளஸ் 23 ஆண்டுகள்.. 29 ஆண்டுக...
