வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் – சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கென கோயில் ஏதும் உருவாக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், பழைய விஜயவாடா நகரில் உள்ள சய்யாட் அப்பாலா சுவாமி கல்லூரி வளாகத்தில்  மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்டுள்ள கோயிலை திறந்து வைத்து சிறப்பிக்குமாறு இந்த கோயிலை நிர்மாணித்த சுதந்திரப் போராட்ட தியாகி உப்புலுரி மல்லிகார்ஜுனா சர்மா என்பவர் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்றுகொண்ட சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி 150-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று நாட்டிலேயே முதன்முறையாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கோயிலை திறந்து வைக்கிறார்.
தமிழக கிராமங்களில் இன்னமும் மக்கள் மனசில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தமிழகத்தின் முதல்வராகவும், பிரபல திரைப்பட நடிகராகவும் உயர்ந்து நின்றவர். இவருக்கு ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் கிராமத்தில் எம்ஜிஆர் மீதான பற்றின் காரணமாக ஒரு கோயில் கட்டப்பட்டு அவர் நடித்த படங்களில் இருந்து கருத்துள்ள பாடல்கள் காலை மாலை இருவேளைகளிலும் போடப்படுகிறது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசியல் தலைவரை சாமியாக்கி கோயில் கட்டி வழிபடும் சூழலை தொடர்ந்து இப்போது ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
264 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன