பிரகிடா சார்பாக மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'இரவின் நிழல்' திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆஹா கல்யாணம் வெப் தொடரில் பவி டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகை சகாய பிரகிடா முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்திருந்தார்.
இரவின் நிழல் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார், இதுகுறித்து அவர் விளக்கமளித்திருந்தது பேசுபொருளானது. அதில், "இந்தக் கதையே தனி ஒருவன் பற்றியதுதான்.
அவனது வாழ்க்கையில் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ...