ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

இரவின் நிழல் ரிலீஸ் தேதியை வெளியிடும் நடிகர் தனுஷ்!

 

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இதில் வரலஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘இரவின் நிழல்’ திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘அகிரா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தின் புதிய அப்டேட்டை பிரபலம் ஒருவர் வெளியிடுவார் என்றும் அப்பிரபலம் என்ற வார்த்தையிலுள்ள மூன்றெழுத்தும் அவர் நடித்துள்ள படத்தின் மூன்றெழுத்தும் ஒன்றாகும் என்று பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன்படி, இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

273 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன