ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

சர்ச்சைக்கு பதிலளித்த மாதவன்!

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’.

இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, “ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது” என்றார்.

மாதவனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர்.

இந்த கருத்து பரபரப்பான நிலையில் சர்ச்சைக்கு மாதவன் பதில் அளித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “‘பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நான் அறியாமையில் இருந்துள்ளேன்.

ஆனால், நாம் இரண்டு என்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்” என்று தெரிவித்துள்ளார்.

284 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன