நாகசைதன்யாவுடன் சமந்தா நிச்சயதார்த்தம் அடுத்த ஆண்டு தான் திருமணம்..!
நடிகை சமந்தாவுக்கும் அவரது காதலர் நாக சைதன்யாவுக்கும் ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர்களுக்கு ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் நாகர்ஜுனா, சமந்தா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
சைதன்யாவும், சமந்தாவும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு தான் திருமணம் செய்ய உள்ளார்களாம்.
தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ரீமேக்கான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. அப்ப...
