புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

மீண்டும் வரலாறு படைத்த “நாடோடி மன்னன்”!

MOVIES, திரைப்படங்கள்
1958 -ஆம் ஆண்டு “பொன்மனச் செம்மல்”, “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான். இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள். இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி,  சரோஜா தேவி  மற்றும்  எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில்,  எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பன்  இணைந்து “எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ்” சார்பில் தயாரித்தார்கள். இப்படம் எம்.ஜி.ஆருக்கு 1...
தமிழ் புத்தாண்டு வாழ்த்து ; நொந்து போய் ட்விட் போட்ட ரஜினி !

தமிழ் புத்தாண்டு வாழ்த்து ; நொந்து போய் ட்விட் போட்ட ரஜினி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
நம் உரிமைகள் கிடைக்காமல்  வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என  ட்விட்டரில் தெரிவித்துள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். சித்திரை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அவரவர் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் டுவிட்டரில் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்....
‘கண்ணே கலைமானே’ –  பேத்தி பாடிய பாடலை ரசித்த கருணாநிதி !

‘கண்ணே கலைமானே’ – பேத்தி பாடிய பாடலை ரசித்த கருணாநிதி !

HOME SLIDER, NEWS, செய்திகள்
வயது முதிர்வினால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியிடம் அவரது பேத்தி பாடல் பாடிக்காட்ட, அதை கேட்டு கருணாநிதி ரசித்து மகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி திமுக தலைவர் கருணாநிதி, அவரது கோபாலபுரம் வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார். எனினும் அவ்வப்போது அண்ணா அறிவாலயத்துக்கு சென்றுவருகிறார். மேலும் கருணாநிதியை அவரது வாரிசுகள் சந்திக்கும் வீடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அண்மையில் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியானது. பேரக்குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கருணாநிதியின் பேத்தியும், மு.க.தமிழரசுவின் மகளுமான பூங்குழலி கருணாநிதியை சந்தித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது, கண்ணே கலைமானே பாடலை பூங்குழலி, கருணாநிதியிடம் பாடி காட்டுகிறார். அதை கே...
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

NEWS, செய்திகள்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 128-பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும் உருவப்படத்திற்கும் அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் சரித்திர நாயகன், ஜனநாயக இந்தியாவின் அடிநாதமான சட்டத்தை இயற்றிவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து அயராமல் குரல் கொடுத்து வந்தவர், சமத்துவத்தை போற்றிய டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதேபோல் பிரதமர் மோடியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செல...
தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

தமிழ் ரசிகர்களுக்கு மட்டு, ‘மெர்குரி’ படத்தைக் காண்பிக்க இயலவில்லையே! – கார்த்திக் சுப்புராஜ் வேதனை!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சினிமா ஸ்டிரைக்கின் ஒரு பகுதியாக புதுப்படங்களை வெளியிடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில்   மெர்க்குரி' என் தாயகம்... தமிழகம் அல்லாமல் உலகெங்கும் 1000 திரையரங்குகளில் பெரிய ரிலீஸை சந்தித்திருக்கிறது என்று பெருமையும் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 30 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகியுள்ள சைலன்ட் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள திரைப்படம் மெர்க்குரி'. மார்ச் மாதம் வெளிவந்த டீசரில் படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். இதற்கிடையில் ஆரம்ப நிலையில் இருந்த தமிழ் சினிமா ஸ்டிரைக் வலுத்தது. பல பேச்சுவார்த்தைக்குப் பிறகும் படத்தை ஸ்டிரைக் முடியாமல் ரிலீஸ் செய்வது ஏற்புடையதாய் இருக்காது எனத் தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம...
தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

தேசிய விருது பெற்றோரின் முழு விபரம்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
நம் அரசின் சார்பில்  திரைப்படங்களுக்கு வழங்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழில் மிகவும் எதிர்பார்த்த படங்களுக்கு விருது கிடைக்காததும் , தகுதி இல்லாத சில படங்களுக்கு விருது அரிவிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 65வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. சேகர் கபூர் தலைமையிலான தேர்வுக் குழு பிராந்திய மொழி படங்களின் தரத்தை பார்த்து மிரண்டு போயுள்ளதாம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்றோரின் விபரம் இதோ, தாதா சாகேப் பால்கே விருது- வினோத் கன்னா சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்) சிறந்த நடிகர்- ரித்தி சென்( நகர் கிர்தான்) சிறந்த இயக்குனர்- ஜெயராஜ் (பயானகம்) சிறந்த சண்டை அமைப்பு - பாகுபலி 2 சிறந்த நடன இயக்குனர்- கணேஷ் ஆச்சார்யா(டாய்லெட் ஏக் பிரேம் கதா) சிறந்த ஸ்பெஷல் எஃ...
டெல்லி இந்தியா கேட்டில் நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..!

டெல்லி இந்தியா கேட்டில் நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராடிய ராகுல்காந்தி..!

NEWS, செய்திகள்
ஜம்மு- காஷ்மீரின் கத்துவா, உத்தரப்பிரதேசத்தின் உனா பகுதிகளில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி இந்தியா கேட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவத்தி ஏந்திப் போராட்டம் நடத்தினார். ஜம்மு- ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்கக்கோரி அம்மாநில பா.ஜ.க அமைச்சர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின்போது மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்தச் சம்பவங்களைக் கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவத்தி ஏந்திப் பேரணியாகச் சென்று போராட்ட...
டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

டை அடிச்சு கஷ்டப்பட்டு கண்ணீர் வந்தது அந்த காலம்.. ஷாம்பூ போட்டாலே கலர் வரும் இந்த காலம்..!

NEWS, செய்திகள்
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.. ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்.கேவிடம் கேட்டோம்.. “இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதை கருப்பாக்க, கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். உலகத்திலேயே ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற...
வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

வரலட்சுமியின் ‘வெல்வெட் நகரம்’!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
மேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி. இவருடன் மாளவிகா சுந்தர், ரமேஷ் திலக், அர்ஜெய், ‘துருவங்கள் பதினாறு ’ புகழ் பிரகாஷ் ராகவன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பகத்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ‘அருவி’ படத்தின் படதொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா எடிட்டிங் செய்க்கிறார். ‘கோலி சோடா 2’ புகழ் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயிற்சி 'துப்பறிவாளன்' தினேஷ். இதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன்.   படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக்  (female centric) திரைப்படம் இது. சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் ம...
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கருப்புக் கொடி போராட்டம்!

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக கருப்புக் கொடி போராட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து, இன்று கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று மோடியின் வருகையைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று எதிர்கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதி...