நம் உரிமைகள் கிடைக்காமல் வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது என ட்விட்டரில் தெரிவித்துள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரை 1-ஆம் தேதி நாடு முழுவதும் அவரவர் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில், ரஜினிகாந்த் டுவிட்டரில் தமிழ் மக்களுக்கு புத்தாண்டு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில், உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகிவிட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
349 Views
