புதன்கிழமை, ஜூலை 1
Shadow

Author: Kodanki

தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டு களைக் கூறினார்கள். தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என குற்றச்சாட்டு வைத்தனர். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு துணைத் தலைவர் வெங்கயா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கயா நாயுடு, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்கட்சிகள் அளித்த மனுவை சட்ட வள்ளுனர்களின் ஆலோசனைப்பட...
“அருவாசண்ட “படத்திற்காக  வைரமுத்து எழுதிய  ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம்

MOVIES, திரைப்படங்கள்
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி.ராஜா தயாரித்திருக்கும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய “ இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி.. இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜி எஸ் டி இல்ல உனக்கு “ என்ற பட்டைய கெளப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. “எம் பேரு மீனாகுமாரி” பாடல் புகழ் அனிதா இந்த பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்கு தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். சிட்டி மட்டுமல்லாமல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கெளப்பும் பாடலா...
விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் தொடங்கியது!

விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் புதிய படம் தொடங்கியது!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும்   இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின்YSR பிலிம்ஸ்( பி) லிட்   பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள். இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க  “  பண்ணையாரும் பத்மினியும் “   “ சேதுபதி “  வெற்றிப்  படங்களை  இயக்கியS.U.அருண்குமார் இயக்கத்தில்  புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.  இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார்  மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார்.  மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இயக்குனர் S.U.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது. இன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்கு ...
அதிக எதிர் பார்ப்பில் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் அரவிந்த்சாமி படம்..!

அதிக எதிர் பார்ப்பில் 27ம் தேதி ரிலீஸ் ஆகும் அரவிந்த்சாமி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
அரவிந்த் சாமி - அமலா பால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்'. ஆக்‌ஷன் கலந்த குடும்ப கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் படஅதிபர்கள் போராட்டம் முடிந்து படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 27ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. சித்திக் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பேபி நைனிகா மற்றும் மாஸ்டர் ராகவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப் தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார். சிற...
அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி

அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். இந்த புதிய படத்தை விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு...
`கரு’ படத்தின் பெயரை தியா என மாற்றிய படக்குழு..!

`கரு’ படத்தின் பெயரை தியா என மாற்றிய படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு'. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...
நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை 5 நாட்கள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 20-ந்தேதி முதல் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று 3-வது நாளாக விசாரணை தொடர்கிறது. விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்தே போலீசார் நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அவர் வெளியில் எங்கும் அழைத்துச் செல்லப்படவில்லை. நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுப்பதற்கு முன்னர் அவரால் பாலியல் அழைப்புக்குள்ளான 4 மாணவிகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேவாங்கர் கல்லூரியில் ரகசியமாக விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகள் 4 பேரும் நிர்மலாதேவியின் பாலியல் தொல்லை குறித்து பரபரப்பு தகவல்களை ...
‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்!

‘ராஜாவுக்கு செக்’ என்ற தலைப்பே கவனத்தை ஈர்க்கும்!

CINI NEWS, சினி நிகழ்வுகள்
தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ராஜாவுக்கு செக் படம் மீண்டும் பணிகளை துவக்கியுள்ளது. சேரன், நந்தனா வர்மா, சராயு மோகன், ஸ்ருஷ்டி டாங்கே, இர்ஃபான் ஆகியோர் நடிக்கிறார்கள். மலையாள திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் தயாரிப்பாளர் களான சோமன் பல்லாட், தாமஸ் கொக்காட் இந்த படத்தை பல்லாட் கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் சார்பில் தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளதாக சொல்கிறார்கள். மலையாள திரையுலகில் கதை ரீதியாகவும், தரம் ரீதியாகவும் நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை பெற்றிருக்கிறோம். உலகம் முழுக்க தமிழ் சினிமாவின் பரவலும், வர்த்தகத்துக்கு நிறைய வாய்ப்புகளும், மிகுதியான திறமையாளர்களும் இருப்பதா...
ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது விக்ரம் பிரபு-வின்  “ பக்கா “!

ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகிறது விக்ரம் பிரபு-வின் “ பக்கா “!

MOVIES, திரைப்படங்கள்
பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “  .                                                                                           விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார். ஒளிப்பதிவு           -  எஸ்.சரவணன் / இசை   -  C.சத்யா  / பாடல்கள்   -   யுகபாரதி, கபிலன்  கலை   -  கதிர் /  நடனம்   -   கல்யாண்,  தினேஷ் ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    -  சசிகுமார்                             ...
தமிழ், தமிழீழ மக்களுக்கு மருந்துகள் இலவசம்: திவ்யா சத்யராஜ் அதிரடி

தமிழ், தமிழீழ மக்களுக்கு மருந்துகள் இலவசம்: திவ்யா சத்யராஜ் அதிரடி

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து மருத்துவருமான திவ்யா சத்யராஜ் தமிழக மற்றும் தமிழீழ மக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்க முடிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் ஈழத்து தமிழர்களுக்கும், தமிழகத்தில் வசிக்கும் வசதியில்லாத மக்களுக்கும் இலவச ஊட்டச்சத்து முகாம் ஒன்றை நடத்தினார். இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் ஊட்டச்சத்து சம்பந்தமான ஆலோசனையும், இலவச விட்டமின் மாத்திரைகளையும் வழங்கினார். இது பற்றி திவ்யா சத்யராஜ்  கூறுகையில், ‘சிறுவயது முதலே ஊட்டச்சத்து நிபுணராக வேண்டும் என்பது என் ஆசை. என் படிப்பு தமிழ்நாட்டில் வாழும் ஏழை மக்களுக்கும், ஈழத்து தமிழர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என் பெருங்கனவாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், ஊட்டச்சத்து குறைபாடு பற்றியும் ஆராய்ச்சி செய்து வந்...