ஞாயிற்றுக்கிழமை, மே 31
Shadow

தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய முடியாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது 4 மூத்த நீதிபதிகள் பல்வேறு குற்றச்சாட்டு களைக் கூறினார்கள். தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என குற்றச்சாட்டு வைத்தனர்.

மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் 7 எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசு துணைத் தலைவர் வெங்கயா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கயா நாயுடு, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி எதிர்கட்சிகள் அளித்த மனுவை சட்ட வள்ளுனர்களின் ஆலோசனைப்படி அதிரடியாக நிராகரித்துள்ளார்.

237 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன