Author: Kodanki
மகேஷ்பாபுவுக்கு வரவேற்பு முருகதாசுக்கு வேண்டுகோள் ஸ்பைடர் பாடல் விழாவில் விஷால் பேச்சு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, ரகுல் பிரீத் சிங், எஸ் ஜே சூர்யா நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. என்விஆர் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ் உரிமையை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளது. ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழா அரங்கம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள் மகேஷ்பாபுவின் ரசிகர்கள்.
நான் ரஜினி, அஜித், விஜய் போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறேன். முதல் நாள் தான் ஒரு ஹாலிவுட் நடிகரை பார்த்த மாதிரி இருந்தது. இரண்டாவது நாளில் இருந்தே சகஜமாக தமிழில் என்னுடன் பேச தொடங்கி விட்டார். சமூக அக்கறை உடைய படங்களை எப்போதும் கொடுத்து வரும் முருகதாஸ் சார் நீங்க...
அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!
விஷாலை உற்சாகப்படுத்திய "தலைவன் வருகிறான்"-“விஷால் ஆன்தம்”!
விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி…”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தே...
ஒரிஜினல் கத்தி.. நிஜ காயம்… சினிமா சண்டை “துப்பறிவாளன்” ஆக்ஷன் கலாட்டா..!
ஹாலிவுட் தர ஆக்ஷனுடன் களம் இறங்கும் துப்பறிவாளன்
ஆக்ஷன் வெளியீட்டு விழா ஏன்? துப்பறிவாளன் ஆக்ஷன் சீக்ரெட்ஸ்
ஒரிஜினல் கத்தியோடு விளையாடிய விஷால் மிஷ்கின்.
பொதுவாக ஒரு படத்துக்கு அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை வெளியிடும் விழா தான் நடத்துவார்கள். ஆனால் துப்பறிவாளன் படத்துக்கு முதன்முறையாக ஆக்ஷன் வெளியீட்டு விழா என்று சண்டைக்காட்சியை திரையிடும் நிகழ்ச்சி நடத்த முதலில் திட்டமிட்டிருந்தார்கள். இப்போதுகூட ரிலீஸுக்கு முன்பே ஒரு நிகழ்ச்சி வைத்து ஆக்ஷன் காட்சியை பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக காண்பிக்க ஒரு ஐடியா இருக்கிறது. விஷால் என்றாலே ஆக்ஷன் ஹீரோ தான்... பின்னர் துப்பறிவாளனில் மட்டும் என்ன ஸ்பெஷல்? படக்குழுவிடம் கேட்டோம்.
‘விஷால் இதற்கு முன்னர் பல சண்டைக்காட்சிகளில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக பெயர் எடுத்திருந்தாலும் கூட இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் செம ஸ்டைலிஷாக இருப்பார். படத்...
மிஷ்கின் – விஷால் கூட்டணி துப்பறிவாளன் ரகசியம்… !
தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம்.
விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது.
விஷால் என்ன சொல்கிறார்?
‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க்கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினா...
கோடிகள் முக்கியமல்ல திரையுலகை காப்பதே முதல் பணி – துப்பறிவாளன் விஷால்..!
நான் கோடிகளை அடுத்த வருடம் கூட சம்பாதித்து கொள்வேன்... திரையுலகத்தை காப்பாற்றுவது தான் இப்போது எனது ஒரே குறிக்கோள் – "துப்பறிவாளன்"- விஷால்
"துப்பறிவாளன்" இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது...வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் ந...
நெருப்புடா மேக்கிங் வீடியோ…
????????Here's Making of #Neruppuda Movie
Releasing tomorrow
@iamVikramPrabhu @nikkigalrani
#NeruppudaFromSept8
https://t.co/ELBTXVp9ho
https://t.co/ELBTXVp9ho
சந்தானத்தின் “சர்வர் சுந்தரம்” செப்.29ல் ரிலீஸ்..!
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது 'சர்வர் சுந்தரம்'. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அனைவரையும் கவர்ந்து, பின்னர் வெளிவந்த டீசரும் டிரைலரும் பல மில்லியன் வியூஸ் பெற்று ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்பொழுது, 'சர்வர் சுந்தரம்' வரும் செப்டம்பர் 29ஆம் தேதி உலகம் முழுவது ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 'சர்வர்' கதாபாத்திரத்திற்காக கதாநாயகன் சந்தானம் பிரத்யேக பயிற்சி மேற்கொண்டுள்ளார். இடை விடா சிரிப்பு வெள்ளமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புது முக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில், 'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சந்தானத்துக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். நடிகர் ராதா ரவி இப்படத்தில் ஒரு முக்கி...


