சனிக்கிழமை, ஜூலை 11
Shadow

Author: Kodanki

தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு

தமிழ் மொழியில் வெளியான தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
  தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிட்ட AR என்டர்டைன்மெண்ட்ஸ் அமித் குமார் அகர்வால் !! மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது. கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிபதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருத்திற்காகவும் தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை ...
நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் “நாதிரு தின்னா”

நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் “நாதிரு தின்னா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கத்தில் "நாதிரு தின்னா" பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணத்திலும் , காதலித்து இணையும் திருமணத்திலும் நடைபெறும் குடும்ப சிக்கல்களை வைத்து இளமை ததும்ப நகைச்சுவையுடன் கூடிய ஒரு வித்தியாசமான படத்தை நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கி உள்ளார். இப்படத்திற்காக நான்கு மாநிலங்களில் நட்சத்திர தேர்வு நடத்தினார். இதில் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார். சபயாச்சி மிஸ்ரா, ஷ்யாம், மகி, ராகுல் நால்வருடன் ராதிகா ப்ரீத்தி, விஜயலட்சுமி, ஹரிகா, ரக்ஷா, அப்பாஜி ஆகியோருடன் தருண் மாஸ்டரும் நடித்துள்ளார். ஸ்ரீதர் நர்லா ஒளிப்பதிவு செய்ய வின்சென்ட் ஜெயராஜ், விஜயகுமார் இருவரின் பாடல்களுக்கு முரளீதர் ராகி இசையமைத்துள்ளார். நடன மாஸ்டராக 300க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சுவர்னா " நாதிரு தின்னா" ...
நடிகை கங்கனாவின் “அக்னிபாத்” கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

நடிகை கங்கனாவின் “அக்னிபாத்” கருத்துக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அதேநேரம் இந்த திட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், 'இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது என்றால் என்ன என்பது குறித்து அறியவும் சில ஆண்டுகள் ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அந்தவகையில் அக்னிபாத் திட்டமும், தொழில் வாழ்க்கையை கட்டமைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டது' என குறிப்பிட்டு உள்ளார். இவரின் இந்த கருத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது....
கமல் குறித்து நெகிழ்ந்து பதிவிட்ட பிரபல இயக்குனர்!1

கமல் குறித்து நெகிழ்ந்து பதிவிட்ட பிரபல இயக்குனர்!1

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான கமல்ஹாசன், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர். ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மேலும் இப்படத்தின் வசூல் ரூ.300 கோடியைத் தாண்டியுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் 'விக்ரம்' படக்குழு கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குனர் ரவிக்குமார் கமல்ஹாசனை சந்தித்துள்ளார். இது குறித்து ரவிக்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதில்,...
நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை!

நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
2003-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, வல்லினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நடிகர், பின்னணிப் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் கைவசம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் எரியும் கண்ணாடி படமும், ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா படமும் உள்ளது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதம் அகிரா என்ற மகள் பிறந்தார். சமீபத்தில் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் நகுல்-ஸ்ருதி தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள...
வழக்கை வாபஸ் பெற ரூ.1 கோடி பேரம்!

வழக்கை வாபஸ் பெற ரூ.1 கோடி பேரம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் விஜய்பாபு தலைமறைவானார். மேலும் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். ஜாமீன் கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது, விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது பல்வேறு தகவல்களை அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இந்தநிலையில் வழக்கை வாபஸ் பெறும்படி விஜய்பாபு தனது நண்பர்கள் மூலம் பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- விஜய்பாபு தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் கணிசமான தொகையை வழங்குவதன் மூலம் ச...
மாமனிதன் படத்தால் காயத்ரிக்கு தேசிய விருது கட்டாயம் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி!

மாமனிதன் படத்தால் காயத்ரிக்கு தேசிய விருது கட்டாயம் என்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  யுவன்சங்கர் ராஜாவின் YSR FILMS தயாரிப்பில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி இணைந்து நடித்துள்ள படம் மாமனிதன். இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. Studio 9 சார்பில் RK சுரேஷ் இப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை ஊடக சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் விநியோகஸ்தர், நடிகர் RK சுரேஷ் கூறியதாவது.. வாழ்வியலை பற்றி படமாக எடுக்கும் இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். அவர்களில் ஒருவர் சீனுராமசாமி. தர்மதுரையின் சாயலில் இல்லாமல் ஒரு புது அனுபவமாக இந்த படம் இருக்கும். இது எல்லோருடைய வாழ்கையிலும் அவர்கள் ரிலேட் செய்துகொள்ளும் படம...
திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

திரையுலக பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
    ராணா டகுபதி, ஹன்சிகா மோத்வானி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் வியந்து பாராட்டிய 'சுழல் தி வோர்டெக்ஸ்' சமூக வலைதளங்களில் சுழல் தி வோர்டெக்ஸ் தொடரை பாராட்டி. கொண்டாடும் திரையுலகப் பிரபலங்கள் ஜுன் 17 ஆம் தேதியான இன்று வெளியாகியிருக்கும் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸ் எனும் வலைதளத் தொடரினை தென்னக நட்சத்திரமான ராணா டகுபதி, நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநரும், நடிகருமான எஸ் ஜே சூர்யா ஆகியோர் கண்டு ரசித்து தங்களது விமர்சனத்தையும் எண்ணங்களையும் சமூக வலைதள பக்கத்தில் உற்சாகமான சுட்டுரைகளாக எழுதி ரசிகர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ‘பாகுபலி’ புகழ் நடிகர் ராணா டகுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், '' சுழல் தி வோர்டெக்ஸ்= குழுவினருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்க...
‘எனக்கு மட்டும் ஏன் ஏன்’ இணையத்தை கலக்கும் பிரபுதேவா படத்தின் பாடல்!

‘எனக்கு மட்டும் ஏன் ஏன்’ இணையத்தை கலக்கும் பிரபுதேவா படத்தின் பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பிரபு தேவா ரேக்ளா, பொய்க்கால் குதிரை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து, இவர் நடித்துள்ள படம் 'மைடியர் பூதம்'. இயக்குனர் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரம்யா நம்பீசன், மாஸ்டர் அஸ்வந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரெடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதை அடுத்து 'மைடியர் பூதம்' திரைப்படத்தில் இருந்து 'எனக்கு மட்டும் ஏன் ஏன்' லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது. ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பிரபுதேவா பூதமாக நடித்துள்ளார். பிரபுதேவாவின் இந்த ...
“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

“ஜெயிலர்” என்ற பெயரை அறிவித்த தலைவர் 169 படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் தலைவர் 169 படம் பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி விவாதமாக மாறியிருந்தது. இருந்தும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதன்படி தலைவர் 169 படத்திற்கு "ஜெயிலர்" என்று பெயிரடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ht...