அரபு தாக்கு… துபாய் மோக படம்..!
படத்தைப் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும் போது, துபாயை கதைகளமாகக் கொண்டு முதன்முதலாக தமிழில் தயாராகும் படம் இது. தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலைத் தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும் பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் அழகாக சொல்லவிருக்கிறோம். அதே போல் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை பின்னணியில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இதுவரை ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் அரபு நாடான துபாயில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவிருக்கும் முதல் படம் இது தான்.
இயக்குநர் பரதன் இயக்கிய அதிதி என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
தமிழில் முதன்முதலாக தமிழேத் தெரியாத பெர்குஸார் கொரல் (Berguzar Korel) என்ற அரபு நட...
