தண்ணீர் சிக்கல் பேசும் அறம் டீசர் வெளியிடுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்..!
தமிழ் சினிமாவுக்கு உலக அளவில் தனது இசையால் தனி மரியாதை ஏற்படுத்தி இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
விருது பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமை பெற்றவர். அவர் ரஜினியின் `2.0', விஜய்யின் 61-வது படம் என பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.
அதேபோல் `லேடி சூப்பர்ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழில் முன்னணி நாயகியாக வலம்வருகிறார். அவர் தற்போது `அறம்', `வேலைக்காரன்', `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்' மற்றும் பெயரிடப்படாத படம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான `டோரா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் 'அறம்' படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா 'அறம்' படத்தில் கலெக்டராக நட...
