நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் – கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!
நேர்மறை சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயர்ந்தநிலையை அடைய முடியும் - கல்லூரி விழாவில் விஜய்சேதுபதி பேச்சு..!
சென்னையில் சர்வதேச தரத்துடன் இயங்கி வரும் சாய் ராம் கல்வி குழுமங்களின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழாவில் இசை ஞானி இளையராஜாவும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கற்பதற்கான உபகரணங்களை வழங்கினார்கள்.
சென்னையை அடுத்துள்ள மேற்கு தாம்பரத்தில் சாய்ராம் கல்வி குழுமத்தின் நிறுவனத்தலைவர் லியோமுத்து அவர்களின் இரண்டாமாண்டு நினைவேந்தல் விழா சாய்ராம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி சாய் பிரகாஷ் லியோமுத்து, இசைஞானி இளையராஜா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் தலை...









