தொழிலாளர் தினத்தில் மிரட்ட வரும் அஜீத் பட டீசர்..!
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் இதுதான். பல்கேரியாவில் பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை `விவேகம்' படத்தின் இரு மாறுபட்ட போஸ்டர்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு படக்குழு விருந்தளித்திருந்தது. முதல் போஸ்டர், அஜித் சிக்ஸ்பேக் உடற்கட்டுடன் கோபமாக நிற்கும்படியாக இருந்தது. இரண்டாவது போஸ்டர் முற்றிலும் மாறுபட்டு, பனிப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போல இருந்தது.
இந்நிலையில், `விவேகம்' படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதேநேரத்தில் அஜித்தின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
.
அஜித் பிறந்தநாளான மே 1-ஆம் தேதி, அவரது ரசிகர்களுக்கு மெகா விருந்தளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்...
