நடிகர் நடிகைள் ஆபாச பட சர்ச்சை எனக்கு எதிரிகளே இல்லை என்கிறார் திடீர் பரபரப்புக்கு ஆளான பாடகி சுசித்ரா..! அதிர்ச்சியில் மீளா தமிழ் திரையுலகம்
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
“எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை செய்தவர்களை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோல் எனது கணவர் உள்ளிட்ட மேலும் பலருடையை டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது எனது பேஸ்புக்கை ஹேக் செய்தனர். இப்போது டுவிட்டரை முடக்கி இருக்கிறார்கள். டுவிட்டர் நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் தெரிவித்து எனது பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன். 2 நாட்களுக்கு முன்பு ஸ்டூடியோவுக்கு சென்று பாடல் ஒலிப்பதிவை முடித்து விட்டு இரவில் வந்து வீட்டில் தூங்கினேன். காலை 9 மணிக்க...
