பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள் தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள் அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை
பல கோடி செலவில் சினிமா தயாரிக்கிறார்கள்
தொழில்நுட்ப வளர்ச்சியால் வீடியோவில் படம் பார்க்கிறார்கள்
அய்யனார் வீதி பட விழாவில் நீதிபதி வேதனை
செந்தில்வேல் தயாரிப்பில் சாட்டை யுவன் நடிப்பில் ஜிப்சிராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அய்யனார் வீதி படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு வெளியிட ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் நடிகர்கள் பாக்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர் தேனப்பன், பாடகர் வேல்முருகன், ஜெய் ஆகாஷ், இசையமைப்பாளர் யு.கே.முரளி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். விழாவுக்கு வந்தவர்களை கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என கிராமிய கலைஞர்களை கெண்டு தாரை தப்பட்டை இசைத்து வரவேற்றார்கள்.
நீதியரசர் முரளிதரன் பேசும்போது: ஒரு படத்தை தயாரிப்பது அத்தனை சுலபமல்ல. அதை மிகுந்த சிரமப்பட்டே தயரிக்கிறார்கள். தொழில்நுட்ப ...
