கண்ணாடி வீட்டிலிருந்தே கல் எறியும் “கவண்” – விமர்சனம்
கண்ணாடி வீட்டில் கல் எறியும் "கவண்"
விமர்சனம்
ஒரே கல்லூரியில் படித்து வரும் விஜய் சேதுபதி - மடோனா செபாஸ்டியன் இருவரும் தொடக்கம் முதலே காதலித்து வருகின்றனர். காதலுடன் சந்தோஷமாக தனது கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வரும் இந்த ஜோடி படிப்பை முடிக்கும் தருவாயில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர்.
ஊடகத்துறையின் மீது அதீத பிரியமுள்ள விஜய் சேதுபதிக்கு, சுமார் 2 வருடங்களுக்கு பிறகு, அக்ஷய் சய்கல் நடத்தி வரும் பிரபல தொலைக்காட்சியில் வேலை கிடைக்கிறது. அதே நிறுவனத்தில்தான் மடோனாவும் வேலை செய்து வருகிறார்.
அது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதியாக வரும் போஸ் வெங்கட்டுக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், குடிநீர் ஏரி ஒன்றில் கலந்து மாசு ஏற்படுத்துகிறது. இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமூக அமைப்பு ஒன்று போராட்டம் நடத்துகிறது. இதில் விக்ராந்த...
