அரசியல் கள பாடலால் விஷால் உற்சாகம்..!
விஷாலை உற்சாகப்படுத்திய "தலைவன் வருகிறான்"-“விஷால் ஆன்தம்”!
விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.
“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி…”
என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தே...






