புகுந்த வீட்டுக்கு விசுவாசமும், பிறந்த வீட் டுக்கு பெருமையும் சேர்க்கிறவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். 3ம் ஆண்டாக சென்னையில் உலக தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்க நார்வே ந £ட்டின் ஓசுலே மாநகர மேயர் கம்சாயினி குணரத்னே, இலங்கை கல்வி அமைச்சர் ராத கிருஷ்ணன், இலங்கை எம்பிக்கள் சிவலிங்கம், சிவமோகன், குமரி அனந்தன், அமெரிக்க தொழில் அதிபர் டாக்டர் பழனி,ஜி.பெரியசாமி, விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தொழிலதிபர் இளம்பாரி கருணாகரன், கவிஞர் ரவிபாரதி, ஹிப்ஆப் தமிழா ஆதி, பாடகர் வேல்முருகன், ஆவணபட இயக்குனர் ஆபிரகாம் லிங்கன், நடிகர் ஜெகன் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
3 வயதில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து நார்வே நாட்டுக்கு சென்று வாழ்ககையில போராடி இன்றைக்க...
