மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட வருகிற 21-ந்தேதி முதல் விருப்பமனு தாக்கல்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-
நடைபெற இருக்கும் 2021-ஆம் ஆண்டு தமிழக மற்றும் பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தல்களிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.
சீரமைப்போம் தமிழகத்தை, புதியதோர் புதுவை செய்வோம் எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையானவர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப்படை.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக பொருளியலைச் சீரமைத்து தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும், அருகதையும், திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்...









