வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் – ராகுல் காந்தி எச்சரிக்கை

 

நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர் – ராகுல்காந்தி

நாம் இருவர் நமக்கு இருவர்’ – 4 நபர்களால் தேசம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் அவர் களின் பெயர்கள் தெரியும். ஆக ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ யாருடைய அரசு. விரைவில் புதிய வேளாண் சட்டங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு முறையை அழிக்கும். கிராமப்புற பொருளாதாரத்தை பாதிக்கும்.அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வேதனையுடன் எச்சரிக்கை விடுத்தார்.

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசிய போது, “இது விவசாயிகள் போராட்டம் அல்ல; இது தேசத்தின் போராட்டம். புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படும். வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட் டுகள் அழிக்கப்பட்டுவிடும். வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய வேண்டும்.

இந்தியாவின் சந்தை முறையை ஒழிப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை வேளாண் சட்டம் அழிக்கிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தொழிலதிபர்களுக்கு உணவு தானியத்தை விற்கும் விவசாயிகள், நீதிமன்றத்துக்கு செல்வதை தடுக்கிறது வேளாண் சட்டம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2-வது வேளாண் சட்டம், பொருள் பதுக்கலை ஊக்குவிக்கிறது. 3 வேளாண் சட்டங்கள் குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும். ஆனால் நாம் இருவர், நமக்கு இருவர் என்ற பாணியில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர். அதானி, அம்பானிக்காக மோடி, அமித்ஷா ஆட்சி நடத்துவதாக ராகுல் மறைமுகமாக சாடினார்.

314 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன