வலதுபக்கம் ‘சிபிஐ விசாரணை’ பழனிசாமி இடது பக்கம் ‘சிபிசிஐடி விசாரணை’ பன்னீர்செல்வம் இவர்களை வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித் ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? -ஸ்டாலின்
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித் ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் திமுகவின் வெற்றியை ஆயிரம் அமித் ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது. -ஸ்டாலின்
திருநெல்வேலி - தென்காசி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது
“கடந்த 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். 'என்னது சிவாஜி செத்துட்டாரா?' என்று கேட்பதுபோல அவரது பேச்சூ இருந்தது.
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனைப் பட்டியல் போடத் தயாரா என்று அமித் ஷா கேட்கிறார். அ...









