புதன்கிழமை, ஜூன் 10
Shadow

300 சவரன் நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் பிரபல Ex. ரவுடி  வரிச்சியூர் செல்வம்

 

பெண்களை விடமும் பெரும்பாலான ரவுடிகள்தான் அதிக நகைமோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கிராம் கணக்கு என்றில்லாமல் கிலோ கணக்கில் நகைகளை போட்டுக்கொண்டு வலம் வருகிறார்கள்.

மதுரை வரிச்சியூரை சேர்ந்த பிரபல ரவுடி  வரிச்சியூர் செல்வம்  இப்போது மனம் திருந்தி வாழ்ந்து வரும் அவர், இப்போது நடமாடும் நகைக்கடையாகவே வலம் வருகிறார்.

‘நாலு பேருக்கு மத்தியில் வித்தியாசமாக தெரியவேண்டும் என்பதால்தான் 300 சவரன் நகைகளை அணிந்திருக்கிறேன். அதற்கு மேல் சுமப்பதற்கு சிரமமாக இருப்பதால்தான் 300 சவரனுக்கு மேல் நகை அணிவதில்லை.  கொரோனா காலத்தில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதால், ஒரு வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, முகத்தை அளவெடுத்து 10 சவரன் தங்கத்தில் முகக்கவசம் செய்து அணிந்திருக்கிறேன்’ என்று சொல்லி வருகிறார்.

589 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன