ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

பெங்களூர் அணி 6-வது வெற்றியை பெற ஆர்வம் – பஞ்சாப்புடன் இன்று மோதல்!

பெங்களூர் அணி 6-வது வெற்றியை பெற ஆர்வம் – பஞ்சாப்புடன் இன்று மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
பெங்களூர் அணி 6-வது வெற்றியை பெற ஆர்வம் - பஞ்சாப்புடன் இன்று மோதல்! ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அகமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் லேசஞ்சர்ஸ் பெங்களூரு- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அந்த அணியில் தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், ஜேமிசன் ஆகியோர் உள்ளனர். பெங்களூரு அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 6 ஆட்டத்தில் 2 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 4 போட்டியில் தோற்றது. அந்த அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், பூரன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆனாலும் பேட்டிங்கில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்துவீச்சில்...
ரொனால்டோவிடம் ரூ.579 கோடி நஷ்டஈடு கேட்கும் மாடல் அழகி!

ரொனால்டோவிடம் ரூ.579 கோடி நஷ்டஈடு கேட்கும் மாடல் அழகி!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ரொனால்டோவிடம் ரூ.579 கோடி நஷ்டஈடு கேட்கும் மாடல் அழகி! பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் மீது அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரீன் மையோர்கா பாலியல் புகார் தெரிவித்தார். 2009-ம் ஆண்டு லாஸ் வேகாசில் உள்ள ஓட்டல் ஒன்றில் தன்னை ரொனால்டோ பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டினார். இந்த புகாரை கேத்ரீன் மையோர்கா 2018-ம் ஆண்டு தெரிவித்தார். இதை ரொனால்டோ மறுத்தார். இருதரப்பின் விருப்பத்துடன் கூடிய உறவு தான் என்று ரொனால்டோ தரப்பினர் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் ரொனால்டோவை விடுவிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்தநிலையில் இவ்விவகாரத்தை கேத்ரீன் மையோர்கா மீண்டும் கிளப்பி உள்ளார். அவர் ரொனால்டோவிடம் 56 மில்லியன் யூரோ (இந்திய...
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை!

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: முதல் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி- 4-வது இடத்தில் மும்பை! ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 171 ரன்கள் எடுத்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி 16.3 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 2-வது இடத...
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
10 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு வேண்டாம்- மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடுமுழுவதும் 10 சதவீதத்துக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளதாக சுமார் 150 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினால் 2-வது அலை பரவலை தடுத்து நிறுத்தி விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. இதுதொடர்பாக கடந்த சில தினங்களாக மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. 150 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு கொண்டு வரப்படலாம் என்று கடந்த 2 நாட்களாக தகவல்கள் வெளியானது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாவிட்டால் முன்பு போல பச்சை, சிவப்பு, மஞ்சள் என 3 மண்டலங்களாக மாவட்டங்களை பிரித்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாக கூறப்பட்டது. இந்தநிலையில் மாநிலங்களுக்கு நேற்று இர...
நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் – கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்!

நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் – கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
நேர்மையான மனிதர் இறந்துவிட்டார் - கே.வி.ஆனந்த் மறைவு குறித்து தனுஷ் உருக்கம்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அநேகன் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி… 5வது நாளாக அலைமோதும் மக்கள்!

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி… 5வது நாளாக அலைமோதும் மக்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி... 5வது நாளாக அலைமோதும் மக்கள்! கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள். முதல் மூன்று நாட்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவுண்டர் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், நேற்று முதல் மருத்துவமனையின் எதிரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு விற்பனை மையம் மாற்றப்பட்டது. மருந்து வாங்க தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் மருந்து விற...
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை- தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு! தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6-ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அன்று இரவே அனைத்து மின்னணு எந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்திலும் 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ர...
கே.வி.ஆனந்த் மறைவு… திரை உலகின் பேரிழப்பு – ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

கே.வி.ஆனந்த் மறைவு… திரை உலகின் பேரிழப்பு – ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
கே.வி.ஆனந்த் மறைவு... திரை உலகின் பேரிழப்பு - ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கே.வி.ஆனந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பெரும் திறமை கொண்ட ஒளிப்பதிவாளர்-இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு, மிகுந்த வேதனையை தருகிறது. திரை உலகின் பேரிழப்பு” என அவர் குறிப்பிட்டுள்ளார்....
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்! பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் காலமானார். 54 வயதான கே.வி.ஆனந்த், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 2005-ம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான கே.வி.ஆனந்த், தொடர்ந்து அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இதுதவிர, காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்....
வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

வீடுகளின் முன்பு கருப்பு கொடி… ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்… ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு!

HOME SLIDER, NEWS, politics
    வீடுகளின் முன்பு கருப்பு கொடி... ‘ஸ்டெர்லைட்டை தடை செய்’ என கோலம்... ஸ்டெர்லைட் திறக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஜூலை வரை அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் ஆலையை சுற்றி உள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தூத்துக்குடி, பண்டாரம்பட்டி புதுத்தெரு கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு ஊரடங்கு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என போலீசார் கேட்டு கொண்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர். நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் மீ...